சீனாவில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 3 பேர் பலி
சீனாவில் ஜியாங்சி மாகாணம், குவாங்பெங் மாவட்டம் 300 ஆண்டுகளாக பட்டாசு தயாரிப்பில் பிரசித்தி பெற்றதாகும். அந்த மாவட்டத்தில், குன்ஷான் என்ற கிராமத்தில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பட்டாசு ஆலையில் நேற்று அதிகாலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து வெடிகள் வெடித்து தீப்பிடித்தது.
இந்த கோர விபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 50 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
விபத்து நடந்த ஆலை பகுதியில் வசித்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
விபத்து நடந்த ஆலையின் நிர்வாகிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply