நாட்டில் பாதாள உலக ஆட்சி தலை­தூக்­கி­யுள்­ள­து : மஹிந்த

MAHINDAநாட்டைப் பாது­காத்த எமது படை­யி­னரை ஜெனிவா பிரே­ர­ணைக்கு அமைய “தூக்கு மேடைக்கு” அனுப்­பு­வ­தற்கு இந்த அரசு முயற்­சிக்­கின்­றது. எனவே மக்கள் விழிப்­பாக இருக்க வேண்டும் என எச்­ச­ரிக்கை விடுத்­துள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டில் தற்­போது நல்­லாட்சி அல்ல “பாதாள உலக” ஆட்சி தலை­தூக்­கி­யுள்­ள­தா­கவும் குற்றம் சாட்­டி­யுள்ளார்.எஹெ­லி­ய­கொடை புளு­க­ஹ­பிட்­டிய ஸ்ரீ சுமண பிரிவென் விஹா­ரையில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் உரை­யாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ, இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.
இங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்;

நாட்டில் ஸ்திர­மில்லா நிலை தலை­தூக்­கி­யுள்­ளது. நல்­லாட்சி என்ற பெயர் மட்டும் தான் உள்­ளது. ஆனால் நாட்டின் பல பிர­தே­சங்­களில் பாதாள உலக கோஷ்­டி­களின் ஆட்சி நடக்­கின்­றது.

அப்பா, அக்கா, தங்கை என்ற பேதம் தெரி­யாத காட்டு மிராண்டி யுகம் தலை­தூக்­கி­யுள்­ளது. கொள்­ளைகள் கொலைகள், குற்றச் செயல்கள் அதி­க­ரித்­துள்­ளன. எமது பௌத்த குரு­மாரை கட்­டுப்­ப­டுத்த சட்டம் கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

இன்று நாட்டில் இடம்­பெறும் “பாதாள உலக” நிர்­வா­கத்­திற்கு எதி­ராக பெளத்த குருமார் போராட ஆயத்தமாகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply