இதயமாற்று சிகிச்சை போல குரங்குக்கு வேறு தலையை பொருத்தி ஆபரேஷன்: விஞ்ஞானிகள் சாதனை

KURANGUமனிதனின் உடல் உறுப்புகளை மாற்றும் ஆபரேஷன் தற்போது வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றை உறுப்பு மாற்று ஆபரேஷன் மூலம் மாற்றி வருகின்றனர். இதே போல் ஒரு மனிதனின் தலையை அகற்றி விட்டு வேறு மனிதனின் தலையை பொருத்தலாமா? என்று ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஏற்கனவே விஞ்ஞானிகள் அறிவித்து இருந்தனர்.

தற்போது குரங்கு ஒன்றின் தலையை அகற்றி விட்டு வேறு குரங்கின் தலையை பொருத்தி வெற்றிகரமாக ஆபரேஷன் செய்துள்ளனர். இந்த தகவலை இப்போது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். ஆபரேஷன் செய்யப்பட்ட குரங்கு உயிருடன் நடமாடும் காட்சி வீடியோவையும் அவர்கள் வெளியிட்டனர்.

இந்த ஆபரேஷன் சீனாவில் உள்ள கார்பின் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடந்ததாக பிரபல நரம்பியல் சிகிச்சை நிபுணர் கனோவேரோ தெரிவித்தார்.

ஆபரேஷன் முடிந்து இந்த குரங்கு நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தது. ஆனாலும் வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக 20 மணி நேரம் கழித்து அந்த குரங்கை கொன்றுவிட்டோம் என்று கனோவேரோ கூறினார்.

மேலும் அவர் கூறும் போது, குரங்கும் மனிதனும் ஒரே மாதிரி உடல் அமைப்பை கொண்டவர்கள். எனவே குரங்குக்கு செய்த ஆபரேஷன் வெற்றிகரமாக அமைந்ததால் மனிதனுக்கும் தலை மாற்று ஆபரேஷன் செய்ய முடியும். அடுத்த 2017–ம் ஆண்டு இறுதிக்குள் இந்த ஆபரேஷன் செயய தயாராகி விடுவோம் என்று கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply