மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் அமெரிக்காவை மிரட்டும் பனிப்புயல்: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து
அட்லாண்ட்டிக் பெருங்கடலையொட்டி அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்துக்கு கடுமையான பனிப்புயல் தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் கடும் பீதிக்குள்ளாகியுள்ளனர்.இந்த பனிப்புயலின் விளைவாக சாலைகளில் இரண்டரை அடிவரை உறைப்பனி மூடலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளதால் வீட்டுக்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதுகின்றது.
குறிப்பாக, வாஷிங்டன், நியூயார்க், பால்டிமோர், விர்ஜினியா, கரோலினா, பிலிடெல்பியா, மேரிலாண்ட் போன்ற பகுதிகளை இந்த பனிப்புயல் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் கடுமையாக தாக்கலாம் என தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் இம்மாநிலங்கள் வழியாக செல்லும் ஆயிரக்கணக்கான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply