ஹவாய் தீவில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் அமெரிக்க ராணுவத்தினர் 12 பேரும் பலி

heliஅமெரிக்க மாநிலமான ஹவாயில் உள்ள தீவுக்கூட்டங்கில் ஒன்று ஒயாஹூ. இதன் வடக்கு கடற்கரை பகுதியான ஹலெய்வா பகுதியில் அமெரிக்க கப்பற்படைக்கு சொந்தமான இரண்டு CH-53E ஹெலிகாப்டர்கள் கடந்த ஜனவரி 14-ம் தேதி இரவு நேர பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. இந்த இரண்டு ஹெலிகாப்டரிலும் தலா ஆறு பேர் இருந்தனர்.பயிற்சியில் ஈடுபட்ட இந்த இரண்டு ஹெலிகாப்டர்களும் திடீரென நேருக்கு நேர் மோதி வெடித்து சிதறின. ஹெலிகாப்டர்களில் இருந்த 12 பேரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் கடற்படையினரால் தீவிரமாக மெற்கொள்ளப்பட்டன. 40 ஆயிரம் சதுர அடி நாட்டிகல் மைல் பரப்பளவில் இந்த தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்ற போதும் ராணுவத்தினரின் உடலைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து கடந்த செவ்வாய் அன்று தேடுதல் பணி நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், ஹெலிகாப்டரில் பயணித்த 12 ராணுவத்தினரும் பலியானதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.

பலியானவர்கள் அனைவரும் 21 முதல் 41 வயதிற்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply