பொது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வாக்குகள் குறித்து சிந்திக்க கூடாது : ஜனாதிபதி
பொது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தீர்மானங்களை மேற்கொள்ளும் போது, வாக்குகள் குறித்து சிந்திக்கக்கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.புத்தளத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். பொது மக்கள் பல்வேறு பிரச்சினைகளுடன் இருக்கின்றனர். அவர்களின் இவ்வாறான பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்கும் போது தேச நன்மையை யோசிக்க வேண்டும். ஆனால் வாக்குகள் குறித்து அரசியல்வாதிகள் யோசிக்கக்கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply