அமெரிக்க அதிபர் தேர்தலில் கோடீசுவரர் புளும்பெர்க் போட்டி

usaஅமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பரில் நடைபெற உள்ளது. எனவே, இங்கு தேர்தல் பணிகள் தொடங்கி விட்டன. ஆளும் ஜனநாயக கட்சியும், எதிர்கட்சியாக திகழும் குடியரசு கட்சியும் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக உள்ளனர்.ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரமப் ஆகியோர் வேட்பாளர் போட்டியில் முன்னிலையில் உள்ளனர்.இந்த நிலையில் மைக்கேல் புளும்பெர்க் (73) என்பவரும் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இவர் எந்த கட்சியையும் சாராமல் சுயேச்சையாகவும் இறங்குகிறார்.

கோடீசுவரான இவர் நியூயார்க் நகர முன்னாள் மேயர் ஆவார். கடந்த 2002 முதல் 2013-ம் ஆண்டு வரை அப்பதவியை வகித்துள்ளார்.

வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக அவரது உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்காக ரூ.6 கோடியே 50 லட்சம் வரை செலவு செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

எனவே, அவர் விரைவில் தனது பிரசாரத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply