ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்துக்கு பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் பெயரில் ஆள்சேர்ப்பு
பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர். அமெரிக்காவை சேர்ந்த இவர் கனடா வம்சாவளியை சேர்ந்தவர். தற்போது இவருக்கு 21 வயது ஆகிறது. மிக இளம் வயதில் புகழ்பெற்றுள்ள இவரை `டுவிட்டர்’ சமூக வலைதளங்களில் 7 கோடியே 30 லட்சத்து 90 ஆயிரம் ரசிகர்கள் இவரை பின் தொடர்கின்றனர்.எனவே, இவரது புகழை தங்களது தீவிரவாத இயக்கத்துக்கு பயன்படுத்தி கொள்ள ஐ.எஸ்.இயக்கம் முடிவு செய்தது. தங்களது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகளுடன் இணைந்து ஜஸ்டின் பீபர் நடனமாடி பாடுவது போன்று `கிராபிக்ஸ் வீடியோ’ தயாரித்து டுவிட்டரில் வெளியிட்டனர். அதற்கு `மெசேஜ் ஆப் இஸ்லாமிக் வெஸ்ட்’ என பெயரிடப்பட்டிருந்தனர்.
இதன் மூலம் மேற்கத்திய நாடுகளை சேர்ந்த இளைஞர்களை ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்துக்கு இழுக்க முயற்சி செய்தனர். ஆனால், இதை ஜஸ்டின் பீபர் அந்த வீடியோவை உடனடியாக டுவிட்டரில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply