பாகிஸ்தானால் தீவிரவாதத்தை அழிக்க முடியும், அழிக்க வேண்டும்: ஒபாமா

obamaபாகிஸ்தானால் தனது மண்ணில் உள்ள தீவிரவாதத்தை அழிக்க முடியும் என்றும், தீவிரவாததை அழிக்க கடுமையான நடவடிகைகளை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கூறிவுள்ளார். அதிபர் ஒபாமா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் “அனைத்து வகையான தீவிரவாதத்தையும் ஒழிக்க பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதை செய்ய பாகிஸ்தானால் முடியும்.

இந்தியா நிண்ட காலமாக மோசமான தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதற்கு பதன்கோட் தாக்குதல் ஒரு உதாரணம். மோடியும் நவாஸ் ஷெரீப்பும் தீவிரவாத்தை ஒழிப்பது குறித்து பேச்சு வார்த்தையை முன்னேடுத்துச் செல்கிறார்கள். இந்தியா அமெரிக்கவிற்கு இடையிலான உறவு சிறப்பாக உள்ளது. ஆனால் இரு நாடுகளின் உறவு முழு திறனை அடையவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

பதன்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் உடனான பிரதமர் மோடியின் அணுகுமுறையை ஒபாமா பாராட்டி உள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply