பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாவிட்டால் சிரியாவில் ராணுவ தாக்குதல்: அமெரிக்கா அதிரடி அறிவிப்பு
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது. அங்கு பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி தனி நாடு அமைத்துள்ளனர். எனவே, அவர்களை ஒடுக்க அமெரிக்கா தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர் படைக்கு ஆதரவு அளித்துள்ளது. ஏராளமான அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்பி அவர்களின் தாக்குதலுக்கு உதவி வருகிறது.
சிரியாவில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் பஷார்இல்–ஆசாத் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே இன்று பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜோ பைடன் துருக்கி சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமர் அகமது டாவுடோக்லுவை சந்தித்து பேசினார்.
அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சிரியா அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெறும் பேச்சு வார்த்தை வெற்றியடைந்து பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட வேண்டும்.
இல்லாவிடில் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான ராணுவ தாக்குதலை நடத்த அமெரிக்கா தயாராக உள்ளது. இத்தாக்குதல் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பகுதிகளில் மட்டுமே நடைபெறும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply