வவுனியா வடக்கில் 1,560 வீடுகள் தேவை என்கிறார் பிரதேச செயலாளர்!

india_housing_vanniவவுனியா வடக்கில் மீள்குடியேறிய மக்களுக்கு ஆயிரத்து 560 வீடுகள் தேவையாகவுள்ளதாக பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தெரிவித்துள்ளார்.வவுனியா வடக்கில் உள்ள மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டுத் திட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

வவுனியா வடக்கு பிரதேசம் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசம். இங்கு மீள்குடியேறிய மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்களில் இரண்டாயிரத்து 511 வீடுகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் ஆயிரத்து 560 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட வேண்டியுள்ளது.

324 வீடுகள் மக்கள் வசிப்பதற்கு ஏற்ற வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், 53 வீடுகள் திருத்தம் செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளன. இதேபோல், 232 குடும்பங்களுக்கு மலசலகூடம் தேவையாகவுள்ளது. இம் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் 325 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் தேவையாகவும் உள்ளன.

இதனால் மீள்குடியேற்றப்பட்ட இப்பகுதி மக்களின் வாழ்வில் அபிவிருத்தியை ஏற்படுத்த உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply