வீடு வேண்டாம், நிவாரணம் வேண்டாம், எமது பிள்ளைகளை வெளியில் விடுங்கள்: யாழில் ஆர்ப்பாட்டம்

jaffna_25012016_3 அனைத்து காணாமலாக்கல்களை வெளிப்படுத்துமாறு கோரியும் அரசியல் கைதிகளை விடுதலையை செய்யுமாறு வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டமானது சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் யாழ்ப்பாண பஸ் தரிப்பிடத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள், தமது பிள்ளைகள் மற்றும் அரசியல் கைதிகளின் புகைப்படங்களை கையில் ஏந்தியவாறு அரசாங்கத்திடம் கேரிக்கை விடுத்தனர்.

வீடு வேண்டாம், நிவாரணம் வேண்டாம், எமது பிள்ளைகளை வெளியில் விடுங்கள், இரகசிய முகாம் இல்லை என கூறுகின்றீர்கள், மறைமுகமாக பிள்ளைகளை கொண்டு வந்து விடுகின்றீர்கள் என்றும் இதன்போது கேள்வி எழுப்பியிருந்தனர்.தமது பிள்ளைகளை விடுதலை செய்யாவிடின் தீ மூட்டி தற்கொலை செய்துகொள்வோம், எமது பிள்ளைகள் இல்லை இனி எமக்கு உயிரும் வேண்டாமென்றும் அவர்கள் கதறி அழுதனர்.

உறவுகளின் அழுகை குரலை கேட்டு மத்திய பஸ் நிலையத்திற்கு வருகை தந்தவர்கள் சோகத்தில் சென்றதையும் அவதானிக்க முடிந்தது.

மூன்று அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

சம உரிமை மக்கள் இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் 3 கோரிக்கைகளை முன் வைத்து யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் காலை 10.30 மணி தொடக்கம் 11.30 வரையிலான ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள், காணாமல்போனவர்களை வெளிப்படுத்துங்கள், பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யுங்கள் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காணாமல்போனவர்களின் உறவினர்கள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கலந்து கொண்டனர். இதன்போது காணாமல்போனவர்கள் உயிரிழந்ததாக பிரதமர் ரணில் கூறிய கருத்துக்கு காணாமல்போனவர்களின் உறவுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply