புதிய அரசு பதவியேற்ற பின்னர் யாழில் 1790 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிப்பு!

Beneficiary_from_Puthukudiyiruppu_in_Mullaiteevu_districtபுதிய அரசு பதவியேற்ற பின்னர் யாழ்ப்பாணம், வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்கு பகுதிகளில் 1790.5 ஏக்கர் நிலப்பரப்பு உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட இடங்களில் இதுவரை 1929 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளதாக யாழ். மாவட்டச் செயலகப் புள்ளி விபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பொறுப்பேற்று புதிய அரசு அமைக்கப்பட்ட பின்னர் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்கு பகுதிகள் இரண்டு கட்டங்களாக பகுதி பகுதியாக நிலங்கள் விடுவிக்கப்பட்டன.

முதலாம் கட்டமாக கடந்த வருடம் மார்ச் மாதம் வலி.வடக்கில் ஜே.235 – காங்கேசன்துறை தெற்கில் 109 ஏக்கர். ஜே.236 – பளை, வீமன்காமம் வடக்கில் 55 ஏக்கர், ஜே.250 – தையிட்டி தெற்கில் 17 ஏக்கர், ஜே.237 – பளை வீமன்காமம் தெற்கில் 62 ஏக்கர், ஜே.238 – கட்டுவனில் 9 ஏக்கர், ஜே.240 – தென்னியமலையில் 26 ஏக்கர், ஜே.241 – வறுத்தலவிளானில் 131.9 ஏக்கர், ஜே.244 – வசாவிளான் கிழக்கில் 80.6 ஏக்கர், ஜே.252 – பலாலி தெற்கில் 147.5 ஏக்கர் என மொத்தம் 638 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டது.

அதே மாதம் வலி.கிழக்கு, வளலாயில் 400 ஏக்கர் விடுவிக்கப்பட்டது.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மொத்தமாக 1320 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன.

இரண்டாம் கட்டமாக கடந்த வருடம் டிசெம்பர் மாதத்தில் காங்கேசன்துறை தெற்கில் 26.7 ஏக்கர், ஜே.236 – பளை வீமன்காமம் வடக்கில் 0.6 ஏக்கர், ஜே.250 – தையிட்டி தெற்கில் 179 ஏக்கர், ஜே.241 – வறுத்தளவிளானில் 0.8 ஏக்கர், ஜே.246 – மயிலிட்டி வடக்கில் 8.3 ஏக்கர், ஜே.252 – பலாலி தெற்கில் 39.6 ஏக்கர், ஜே.253 – பலாலி கிழக்கில் 160 ஏக்கர், ஜே.254 – பலாலி வடக்கில் 64.7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன.

அதேபோன்று வலி.கிழக்கு – வளலாய் பகுதியில் ஏஞ்சியிருந்த 221.8 ஏக்கருமாக இரு இடங்களிலும் மொத்தம் 701.5 ஏக்கர் விடுவிக்கப்பட்டது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மொதம்மாக 632 குடும்பங்களும் மீள்குடியேறிக் கொண்டுள்ளனர் என்றும் மாவட்ட செயலக புள்ளி விபரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply