வவுனியா அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அதிகாரிகள் அடாவடி

timthumbவவுனியா அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அதிகாரிகள் அடாவடி வீதிப்பிரச்சனையை வெளிப்படுத்திய இளைஞன் விரட்டியடிப்பு

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தமது கிராம வீதி தொடர்பான பிரச்சனையை வெளிப்படுத்திய இளைஞன் ஒருவரை அடாவடியாக வெளியேற்றினர் அரச அதிகாரிகள். புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் வவுனியா அபிவிருத்தி குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான அமைச்சர் றிசாட்பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன்போது வீதிகள் திருத்தப்படாமை குறித்து அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், இணைத்தலைவர்கள் கலந்தாலோசித்துக் கொண்டிருந்த போது வவுனியா, கணேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமகன் ஒருவர் தமது பகுதி வீதி நீண்டகாலமாக திருத்தப்படவில்லை. இது தொடர்பில் பலரிடமும் தெரிவித்தும் தீர்வு கிடைக்கவில்லை. வீதியின் வீடியோ ஆதாரம் தற்போது என்னிடம் உள்ளது. இதைப் பார்த்து எமது வீதியை நடக்கக் கூடிய வகையில் என்றாலும் திருத்தி தர இக் கூட்டத்தில் முடிவெடுக்குமாறு கோரியிருந்தார்.

இதனைக் கேட்ட இணைத்தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் இது தொடர்பில் தாம் இங்கு பேசுவதாகவும், விரைவில் வீதி திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்ததுடன், வீடியோவை அரச அதிபரிடம் கொடுக்குமாறும் கோரியிருந்தார்.அதற்கு சம்மதித்த பொதுமகன் தனது இடத்தில் அமர சென்ற போது அங்கு வந்த மாவட்ட செயலகத்தின் இரு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள், உன்னை உள்ளே விட்டது யார்? இங்கு ஏன் வந்தாய் எனக் கூறி உடனடியாக பொதுமகனை மண்டபத்தில் இருந்து வெளியேற்றினர்.

அமைச்சரால் வீடியோவை அரச அதிபரிடம் கூட்டம் முடிவடைய கொடுக்குமாறு கூறப்பட்ட போதும் அதனை கொடுக்கவிடாது குறித்த அதிகாரிகள் விரட்டியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply