ஜனாதிபதியின் செயற்பாடுகளே புதிய கட்சியின் விதியை தீர்மானிக்கும்
உருவாக்கப்படவுள்ள புதிய கட்சியின் விதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
புதிய கட்சி ஒன்றின் தேவை எழுந்துள்ளதாக கோட்டாபய ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ள நிலையில் கூட்டு எதிரணி இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றதோடு, எதிர்காலத்தில் தேர்தலுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது தொடர்பில் ஆராயப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply