யாழ்ப்பாணம் நவக்கிரியில் ஏற்பட்ட நில வெடிப்புக்கள் தொடர்பில் ஆய்வு
யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு நவக்கிரி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலத்தில்ஏற்பட்ட வெடிப்பு தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் உள்ள தேசிய கட்டங்கள் ஆராய்ச்சி அமைப்பினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த குழுவினர் இன்று புதன்கிழமை காலை சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
தேசிய கட்டங்கள் ஆராய்ச்சி அமைப்பின் நில உடைவு ஆராய்ச்சி மற்றும் அபாய முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார தலைமையிலான குழுவினர் நவீன தொழிநுட்ப உபகரணங்களின் உதவியுடன் கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
புத்தூர் மேற்கு நவக்கிரி பகுதியில் நில வெடிப்பு ஏற்பட்டமைக்கு நில அதிர்வு காரணம் என மக்கள் தெரிவித்த நிலையில் புவியியல்துறை பேராசிரியர்கள் நில வெடிப்பிற்கு காரணம் நில அதிர்வு அல்ல நிலத்தின் கீழ் உள்ள சுண்ணாம்பு பாறைகள் இடிந்துள்ளமையே காரணம் என சுட்டிக்காட்டியிருந்தனர்.
மேலும் நிலாவரை கிணறு மற்றும் மானிப்பாய் கட்டுடை பகுதியில் உள்ள இடிகுண்டு போன்று இந்தப் பகுதியும் நிலத்திற்கு கீழ் செல்லும் அபாயம் உள்ளதாகவும் கூறியிருந்தனர்.
இந்நிலையில் நில வெடிப்பு மேலும் அதிகரித்துள்ளமையை தொடர்ந்து இன்றைய தினம் அப்பகுதியிலுள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதுடன் தோட்டங்களுக்கு நீர் இறைப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : TELOnews, இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply