ஈரோஸ் இயக்கத்தின் கிழக்கு மாகாண தலைவர் பிணையில் விடுதலை!
சந்தேகநபர் இன்று நீதிமன்றில் முன்னிலையான போது 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்லுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் திகதி இனத்தெரியாத சிலர் தம்மை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தினார்கள் என பொலிஸாருக்கு பொய்யான தகவல்களை வழங்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சந்தேக நபர் தலைமறைவாகியிருந்த நிலையில், மட்டக்களப்பு நீதிமன்றம் அவருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.
எவ்வாறாயினும், சந்தேக நபர் இன்று நீதிமன்றில் முன்னிலையான போது, அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை, குறித்த வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply