வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பிரதான நுழைவாயிலை நீதிபதி இளஞ்செழியன் திறந்து வைத்தார் !
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் 2002 ஆம் ஆண்டு உயர்தர வகுப்பு பழைய மாணவர்களால் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவாயிலை வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 1999 ஆம் ஆண்டு கல்விப் பொதுசாதாரணதரம் படித்த மற்றும் 2002 ஆம் ஆண்டு அந்த பாடசாலையில் உயர்தரம் படித்த பழைய மாணவர்களால் 25 இலட்சம் ரூபாய் செலவில் பாடசாலைக்கு அழகிய நுழைவாயில் அமைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா, கிளிநொச்சி மாவட்ட நீதிபதியும் பாடசாலையின் பழைய மாணவனுமாகிய ரி.பிரபாகரன், மாவட்ட அரச அதிபர் எம்.வி.ரோஹண புஸ்பகுமார, வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா, பொலிஸ் அதிகாரிகள்,அதிபர், ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள், பெற்றோர், எனப் பலரும் லந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : TELOnews, இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply