“மலையக மக்களின் அடையாளப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்”

111111111111111111இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களை, நாட்டில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் சாசனத்தில் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் என குறிப்பிட வேண்டும் என நிபுணர்கள் குழுவொன்று பரிந்துரை செய்துள்ளது.

தமிழ் முற்போக்குக் கூட்டணியால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவரான பெ.முத்துலிங்கம் தெரிவித்தார்.

அக்கூட்டணியால் நியமிக்கப்பட்டுள்ள வல்லுநர் குழு முதல் முறையாகக் கூடியபோது, இந்தியத் தமிழர்களின் அடையாளம், மலையகத் தமிழர்களுக்கான அதிகார பகிர்வு மற்றும் பிரஜாவுரிமை ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பாகவே கவனம் செலுத்தியதாக முத்துலிங்கம் கூறுகிறார்.

இந்திய வம்சாவளி மக்கள் அடையாளப் பிரச்சினையில் சிக்கியுள்ளதாகவும், அது களையப்பட வேண்டியது அவசியம் எனவும் அந்த வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.

மலையக மக்களுக்கான அதிகார பகிர்வு மத்திய, மாகாண மற்றும் உள்ளுராட்சி சபை என அனைத்து மட்டத்திலும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதும் தங்களால் பரிந்துரையாக முன் வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : TELOnews, இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply