ஏமனில் அதிபர் மாளிகை அருகில் தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல்: 8 பேர் பலி

emanவளைகுடா நாடான ஏமனில் அதிபர் மாளிகை அருகில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.உயிரிழந்தவர்களில் ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உள்ளதாகவும் மேலும் 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ஆளுநர் அய்தரஸ் அல்-ஜூபாய்தியை குறி வைத்து அவரது பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் அப்போது அல்-ஜூபாய்தி இல்லை என்று கூறப்பட்டது.

ஜூபாய்தி மீது தாக்குதல் நடத்துவதற்காக ஏற்கனவே இம்மாத தொடக்கத்தில் நடத்தப்பட்டது. இவருக்கு முன்பாக இருந்த ஜாபர் சாட் கொல்லப்பட்டதை அடுத்து இவர் கடந்த டிசம்பர் மாதம் பதவிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply