யுத்தக்குற்ற விசாரணையில் சர்வதேசத்தின் உதவி பெற்றுக்கொள்ளப்படும் – ரணில்
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு சர்வதேசத்தின் தலையீடு அவசியமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச போர்க்குற்ற விசாரணையை அரசாங்கம் அனுமதிக்காது எனவும், நாம் ரோம் உடன்பாட்டில்
கைச்சாத்திடவில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
போர்க்குற்ற விசாரணை தொடர்பில் தான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை நேற்று முன்தினம் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை எனவும், உள்நாட்டு நீதிபதிகளே விசாரணைகளை மேற்கொள்வார்கள் எனவும் ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்த விடயத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளக பொறிமுறையில் விசாரணைகள் நடைபெறும் அதேவேளை, சர்வதேசத்தின் உதவிகள் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் தானும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அரசாங்கத்தில் உள்ள ஏனையோரும் ஒரே நிலைப்பாட்டிலேயே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : TELOnews, இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply