தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவது அரசியல் அமைப்பிற்கு முரணானது – உதய கம்மன்பில

KAMAதேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவது அரசியல் அமைப்பிற்கு முரணானது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் போது தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடுவது அரசியல் அமைப்பிற்கு புறம்பானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்று கொண்டு வர முடியும் என அவர் தெரவித்துள்ளார்.

அரசியல் அமைப்பின் அடிப்படையில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் எனவும், அரசியல் அமைப்பின் மூன்றாம் உப சரத்தில் இது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பின் 83ம் சரத்தின் பிரகாரம், சிங்கள மொழி தவிர தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட வேண்டுமாயின் மூன்றில் இரண்டு நாடாளுமன்ற பெரும்பான்மையும், சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டிது அவசியமாகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே தேசிய நிகழ்வு ஒன்றில் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடுவது அரசியல் அமைப்பிற்கு முரணானது மட்டுமன்றி, ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படக்கூடிய குற்றமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்த போதிலும், பெங்காலி மொழியிலான தேசிய கீதமே இசைக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் 16 அரச கரும மொழிகள் காணப்பட்டாலும் பெங்காலி மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படுகின்றது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : TELOnews, இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply