ஆளும் தரப்புக்குள் நிலவி வரும் உள்முரண்பாடுகளே உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக் காரணம் -விஜித ஹேரத்

vijitha_herath_15122015_kaaஆளும் தரப்புக்குள்  நிலவி வரும் உள்முரண்பாடுகளே உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக் காரணம் என ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத்தெரிவித்துள்ளார் .

சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சிக்குள் நிலவி வரும் உள் முரண்பாடுகளே உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படக் காரணமாகும்.

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான கட்சிகளுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை நிலவி வருகின்றது.

இரண்டு பிரதான கட்சிகளுக்கு இடையில் அதிகாரங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பில் உரிய இணக்கப்பாடற்ற நிலைமை நீடிக்கின்றது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்துவதற்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை களைந்து தேர்தல் நடத்த சாத்தியமுண்டு.

எனினும் அரசாங்கம் குறைபாடுகளை துரித கதியில் களைவதற்கு விரும்பவில்லை.

ஆளும் கட்சிக்குள் நிலவி வரும் உள் முரண்பாடுகளின் உள்ளுராட்சி மன்றங்கள் கிரமமாக இயங்குவதில்லை எனவும் இதனால் மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார் .

மூலம்/ஆக்கம் : TELOnews, இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply