இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை வருகை.

susmaஇந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை சுதந்திரதினமன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இரண்டு நாள் பயணமாக இலங்கை வரும் சுஷ்மா யாழ்ப்பாணத்திற்கும் செல்லவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கை – இந்திய கூட்டு ஆணைக்குழு சந்திப்பும்  நடைபெறுகின்றது. இதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவே இந்திய வெளியுறவுச் செயலாளர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதேவேளை இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்போடும் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

இதேவேளை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் செல்லும் சுஷ்மா சுவராஜ் வடக்கு முதலமைச்சரை சந்திப்பதோடு வடக்கில் இந்திய அரசின் நிதியுதவியில் அமைக்கப்படும் வீட்டுத்திட்டங்களையும் பார்வையிடவுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply