ஏமனில் சவுதி கூட்டுப்படை வான்தாக்குல்: 32 பேர் பலி

emanஏமனில் அதிபர் மன்சூர் ஹாதிக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். அதிபருக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி கூட்டுப்படை வான்வழி தாக்குதல்களை நடத்திவருகின்றன. சமாதான பேச்சுவார்த்தையின் மூலம் சண்டையை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. இருந்த போதிலும் அங்கு இரு தரப்புக்கும் இடையேயான சண்டை தொடர்ந்து தீவிரம் அடைந்து வருகிறது.

நேற்று முன்தினம் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள தலைநகர் சானாவில் சவுதி கூட்டுப்படை தொடர் வான்வழி தாக்குதல்களை நடத்தின. கிளர்ச்சியாளர்களின் முகாம்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது குண்டுகளை வீசியதில் அப்பாவி பொதுமக்கள் 8 பேர் உள்பட 32 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

இதற்கிடையில், சானாவில் உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் உள்பட பல்வேறு சமூக ஆர்வலர்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்தி சென்று இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply