பூமலர்ந்தான் கிராமத்து குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு – அமைச்சர் டெனிஸ்வரன்…

denishமடு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட பூமலர்ந்தான் கிராமத்தில் கடந்த ஆண்டு குடியமர்த்தப்பட்ட மக்கள் குடிநீர் தேவைக்கு பெரும் சிரமத்தை எதிர்நோக்கியவேளை, அங்குள்ள மக்களும் அதிகாரிகளும் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது கவனத்துக்கு கொண்டுவந்தனர், அதனைத் தொடர்ந்து அங்கு விஜயம்  மேற்கொண்ட அமைச்சர் அடிப்படை தேவையாகிய குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் தமது வருடாந்த பிரமாண அடிப்படையிலான அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து கடந்த ஆண்டு 5 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டு நீர்த்தாங்கி மற்றும் நீரிணைப்பு என்பன கடந்த ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்திய மடு பிரதேச செயலாளர் திரு எப்.சி.சத்தியசோதி அவர்களுக்கு தனது விசேட நன்றிகளை அமைச்சர் தெரிவித்ததோடு. திட்டத்துக்கான காசோலையை 02-01-2016 நண்பகல் மன்னாரில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் வைத்து பூமலர்ந்தான் கிராம அபிவிருத்தி சங்கத்தினரிடம் கையளித்தார்.

 

 

 

 

மூலம்/ஆக்கம் : TELOnews, இணையத்தள கட்டுரை, இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply