இலங்கை-இந்தோனேசியா புலனாய்வுத் தகவல்கள் பரிமாற்றம்
விடுதலைப் புலிகளுக்கு இந்தோனேசியாவிலிருந்து கூடுதலான ஆயுதங்கள் கடத்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுவரும் நிலையில், பாதுகாப்புத் தொடர்பான புலனாய்வுத் தகவல்களைத் தம்முடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமென இலங்கை இந்தோனேசியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
“இந்தோனேசியாவிடமிருந்து பாதுகாப்பு விடயத்தில் குறிப்பாக புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளோம்” எனத் தற்பொழுது இலங்கை வந்திருக்கும் இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.ஹசன் விராயுடுவிடம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம கோரிக்கை விடுத்துள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் புனாய்வுத் தகவல்களைப் பரிமாறுவது உட்பட பாதுகாப்பு விடயத்தில் ஒப்பந்தமொன்றைச் செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் கடந்த 2007ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
எனினும், இரு நாடுகளுக்கும் இடையில் எப்பொழுது ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்பது தொடர்பான கால எல்லைகுறித்து ரோகித்த போகல்லாகம எதுவும் கூறியிருக்கவில்லை. இரு தரப்புக்குமான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நடைபெறுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர், இன்று திங்கட்கிழமை இலங்கையுடன் இரு நாடுகளுக்குமிடையிலான வீசா குறித்த ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடவுள்ளார்.
அத்துடன், இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் பாதுகாப்பு, வர்த்தகம், விவசாயம், விமான சேவைகள் மற்றும் ஏனைய பல்வேறு விடயங்கள் குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்தனர்.
இலங்கை வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர், “இலங்கையின் ஒருமைப்பாட்டைத் நாம் மதிக்கின்றோம். இந்த நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குத் நாம் முழு ஒத்துழைப்தாம் முழு ஒத்துழைப்பையும் வழங்க நாங்கள் தயார்” என்றார் அவர்.
எந்தவொரு பயங்கரவாத அமைப்புத் தமது நாட்டைப் பயன்படுத்தி எந்தவொரு நாட்டுக்கும் எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தமது அரசாங்கம் அனுமதிக்காது எனவும் இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர் உறுதிமொழி வழங்கினார்.
அத்துடன், தமது நாட்டில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் இல்லையெனக் குறிப்பிட்ட அமைச்சர், கடந்த காலங்களில் பல்வேறு நபர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்டநவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply