பரா ஒலிம்பிக் போட்டிகளில் மட்டு மாவட்டம் சாதனை-முன்னாள் போராளிகளும் பங்கேற்பு .
தேசிய மட்டத்தில் நடைபெற்ற பரா ஒலிம்பிக் போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்டம் 23 பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட வரலாற்றில் முதல் தடவையாக விசேட தேவையுடையவர்கள் தேசியமட்ட பரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று 23 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக 46 மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு 04 தங்கப்பதக்கங்கள் 07 வெள்ளிப்பதக்கங்கள் 11 வென்கலப்பதக்கங்கள் என மொத்தமாக 23 பதக்கங்களை வெற்றியீட்டியிருந்தனர்.
இதில் 26 முன்னாள் போராளிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறைந்தளவிலான வளங்களை வைத்தக்கொண்டு வெறுமனே இரண்டு நாட்கள் பயிற்சிகளை மட்டும் பெற்று விசேடதேவையுடைய இராணுவ வீரர்களுடன் போட்டியிற்கு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு அண்மையில் முனைப்பு நிறுவனத்தினால் நடாத்தப்பட்டது.
மாவட்ட சமூகசேவைகள் திணைக்களத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இந்த கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன் முனைப்பு நிறுவனத்தின் வெற்றிக் கேடயங்களையும் வழங்கிவைத்திருந்தார்.
மூலம்/ஆக்கம் : TELOnews, இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply