தலிபான் தலைவன் சாஜ்னா உயிருடன் உள்ளான்?

talipanஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமான தாக்குதலில், 18 தலிபான் தீவிரவாதிகள் உயிரிழந்தனர். ஆனால், இந்த தாக்குதலில் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் சாஜ்னா உயிர் தப்பினான் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் (தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான்) ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவ்விரு நாடுகளிலுமே அவர்கள் அவ்வப்போது நாசவேலைகளை அரங்கேற்றி வருகிறார்கள். அவ்வப்போது அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் பக்திகா மாகாணத்தில், பீர்மால் என்ற இடத்தில் கடந்த 1-ம் தேதி பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் கூட்டம் நடைபெற்றது.

சாஜ்னா தலைமையில் பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் கூட்டம் நடத்துவதை அறிந்து, கூட்டம் நடத்திய அரங்கை குறி வைத்து ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 18 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால் கூட்டத்தில் சாஜ்னா பங்கேற்காததால் இந்த ஆளில்லா விமான தாக்குதலில் தப்பித்து விட்டான் என்று நம்பப்படுகிறது.

சாஜ்னா, 2013-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தின் துணைத்தலைவர் வாலி உர் ரகுமான் இறந்ததை தொடர்ந்து, அவரது இடத்துக்கு வந்தான். பாகிஸ்தானில் 2012-ம் ஆண்டு பான்னு என்ற இடத்தில் உள்ள சிறையில் தாக்குதல் நடத்தி 400 பேரை விடுவித்ததில், மூளையாக செயல்பட்டவன். 2014-ம் ஆண்டு, தலிபான் தலைவர் ஹக்கிமுல்லா மசூத், அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு, தலிபான் இயக்கம் இரண்டாக பிளவு பட்டது. மசூத் அணியை சாஜ்னாதான் தலைமை ஏற்று நடத்தி வருகிறான்.

ஏற்கனவே கடந்த ஆண்டு ஆளில்லா விமான தாக்குதல் ஒன்றில் சிக்கி சாஜ்னா பலியாகி விட்டான் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் அப்போது கொல்லப்பட வில்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளது. அவன் இன்னும் உயிருடன் உள்ளானா? என்ற சந்தேகத்தை வலுவடையச் செய்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply