வவுனியா பூவரசங்குளத்தில் மன்னார் வீதியை மறித்து பொதுமக்கள் போராட்டம் : போக்குவரத்து பாதிப்பு
வவுனியா வேலங்குளம் கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட 8 மீள்குடியேற்ற கிராமங்களின் நிரந்தர வீட்டுத்திட்டம், வீதிப் புனரமைப்பு, உட்கட்டமைப்பு தேவைகளை வலியிறுத்தி இன்று (04.02.2016) காலை 9 மணிமுதல் இரணை இலுப்பைக்குளம் சந்திப் பகுதியில் மன்னார் வீதியை மறித்து நூற்றுக் கணக்கான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மன்னார் வீதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது. தொடர்சியாக அரசாங்கத்திடம் மேற்படி கோரிக்கைகளை முன்வைத்துவந்த இக் கிராம மக்கள் எந்த முன்னேற்ற செயற்பாடுகளும் அற்ற நிலையில் பொறுமை இழந்து வீதிக்கு இறங்கியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply