என்னை தனியே வருமாறு இராணுவத்தினர் அழைத்தனர்-காணாமல் போன ஒருவரின் தாய்
என்னை தனியே வருமாறு இராணுவத்தினர் அழைத்தனர் என காணாமல் போன ஒருவரின் தாய் இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற சுதந்திர தின பகிஷ்கரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜோசப் பரராசசிங்கம் கொலைசெய்யப்பட்ட தினத்தில் சாவகச்சேரி பகுதியில் வைத்து தனது மகன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாகவும், இவருடன் சேர்த்து 3 பேர் அன்றைய தினம் கைது செய்யப்பட்ட நிலையில், இருவரை கிராம சேவையாளர் முன்னிலையில் விடுதலைசெய்ததாகவும் கூறினார்.
தனது மகன் வன்னி மாவட்டம் என்றதனால் விடுதலை செய்யவில்லை எனவும், தன்னை தனியே இராணுவ முகாமிற்கு வருமாறும், பிள்ளையை காட்டுவதாக கூறி அழைத்ததாகவும் தெரிவித்த அந்தத் தாயார் தனது மகன் இறந்தாலும் பரவாயில்லை என தான் செல்லவில்லை எனவும் கண்ணீர் மல்க கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply