ஞானசார தேரரை விடுவிக்க முடியாது; பிக்குகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி பொதுபல சேனா இயக்கத்தினரால் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது
விஹாரமாதேவி பூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இவர்கள் ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்திற்கு செல்ல முயற்சி செய்திருந்த போதும் நீதிமன்ற உத்தரவொன்றிற்கு அமைய காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர்
பின்னர் ஜனாதிபதியின் மேலதிக செயலாளருக்கும், பொதுபல சேனா இயக்கத்தின் பிக்குமாருக்கும் இடையில் புத்தசாசன அமைச்சில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது இணக்கம் எட்டப்படாத நிலையில் ஜனாதிபதி செயலாளரை சந்திக்க வேண்டும் என தொடர்ந்தும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது
இதன்படி பொதுபல சேனாவின் நான்கு பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளரை சந்திக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஜனாதிபதியின் செயலாளரை சந்திப்பதற்கு சென்ற பிரதிநிதிகள் வெளியில் வர தாமதம் ஏற்பட்டதனால் 500 க்கும் அதிகமான பிக்குமார்கள் ஒன்றிணைந்து விகாரமஹா தேவி பூங்காவில் இருந்து ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்தனர்.
பிரதிநிதிகள் வெளியில் வந்ததன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி கடந்த 28 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது.
இதேவேளை, கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிப்பதற்கு தம்மால் செயற்பட முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடலில் கலந்துகொண்ட பொதுபல சேனாவின் பிக்கு ஒருவர் இதனை குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply