கே.பி.யிடம் தொடர்ந்தும் வாக்குமூலம் பதிவு – சட்டமா அதிபர் தரப்பு நீதிமன்றில் தெரிவிப்பு
புலிகளின் நடவடிக்கையில், கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் தொடர்பு பற்றிய விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் நேற்று புதன்கிழமை (03/02/2016) சமர்ப்பித்தார்.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜயந்த ஜயசூரியவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவன்னவும், கே.பி.யிடமிருந்து இப்போதும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுவருவதாக நீதிமன்றில் தெரிவித்தனர்.
நீதியரசர்களான விஜித் கே.மலல்கொட, தேவிகா தென்னகோன் அடங்கிய குழு, வழக்கை எதிர்வரும் மே மாதம் 09ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனைக் கைது செய்து சட்டநடவடிக்கை எடுக்கும்படி, மக்கள் விடுதலை முன்னணயின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், ஆணைகோரும் மனுவைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி – குளோபல் தமிழ் செய்திகள்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply