MAHINDAஇந்தியாவை மகிழ்ச்சிப் படுத்துவதற்காகவே இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடப்படுகிறது எதிர்காலத்தில் அரபு மொழியிலும் இலங்கையின் தேசிய கீதத்தை பாடவேண்டும் என கேட்பார்கள் என முன்னாள் ஜனாதிபதிமஹிந்தராஜபக்ஷதெரிவித்தார்.நாரஹேன்பிட்டி விகாரைக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதியிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார் .

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படவுள்ளதாக வெளியான செய்தி குறித்து மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்வியெழுப்பப்பட்டது அதற்கு பதிலளித்த அவர், தமிழில் பாடவேண்டும் என யாரும் வலியுறுத்த வில்லை. கோடிக்கணக்கான தமிழர்கள் வாழும் தமிழ் நாட்டிலும், இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் ஒரே மொழியில்தான் தேசிய கீதம் பாடப்படுகிறது.

ஆங்கில மொழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, தமிழையோ, சிங்களத்தையோ சரியாக உச்சரிக்க முடியாது.நாங்கள் ஆங்கிலத்தில்தான் தேசிய கீதம் பாடவேண்டும் என கோரிக்கை விடுப்பார்களாயின் என்ன செய்வது.

இந்தியாவை மகிழ்ச்சிப் படுத்துவதற்காகவே இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடப்படுகிறது என்றார்.