மன்னார் பொதுவைத்தியசாலையில் நுளம்புத் தாக்கம் : மக்கள் விசனம்

mannarrrrrrrrrrrrrrமன்னார் பொதுவைத்தியசாலையில் உள்ள பல வைத்தியசாலை விடுதிகளில் நுளம்பின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் நோயாளிகள் உட்பட பார்வையாளர்கள் மிக மோசமாக பாதிக்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நுளம்பு கட்டுப்படுத்தல் தொடர்பாக சுகாதார திணைக்களம் பல நடவடிக்கைகளை நாடு பூராகவும் மேற்கொண்டு வருகின்றது.

மன்னார் மாவட்டத்திலும் குறித்த நடவடிக்கை தொடர்கின்ற நிலையில், பிரதான பொதுவைத்தியசாலையில் உள்ள நோயாளர் விடுதிகளில் மிக மோசமாக நுளம்புகளின் தாக்கம் காணப்படுகின்றது. இதனால் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாவதுடன், நோயை குணப்படுத்த வைத்தியசாலை வரும் நோயாளிகள் நுளம்பு தாக்கத்தால் வேறு நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கிராமங்கள் தோறும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை என சுகாதார வேலை திட்டங்களை சுகாதார அமைச்சு விரிவுபடுத்தியுள்ளது. கிராமங்கள் தோறும் டெங்கு ஒழிப்பை மேற்கொண்டு வரும் சுகாதார திணைக்கள அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தமது வைத்தியசாலையில் உள்ள நுளம்பு பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்காமை கவலையளிப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே, குறித்த பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் வைத்தியசாலை விடுதிகளில் நேரில் சென்று உண்மை நிலைமைகளை பார்வையிடுவதுடன் நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.

 

நன்றி – kilinochchi net

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply