நாகவிகாரைக்குச் சென்று புத்த பெருமானை வழிபட்டார் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன்

naakavikaaraநாகவிகாரைக்குச் சென்று புத்த பெருமானை வழிபட்ட வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் நாட்டின் 68ஆவது சுதந்திர தினத்தில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமையானது தமிழ் மக்களுக்கும் தமக்கும் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.யாழ் நாகவிகாரையில் இடம்பெற்ற சமய வழிபாடுகளை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு கருத்து தெரிவித்த அவர், இலங்கையின் 68ஆவது சுதந்திரதினம் நேற்று முன்தினம் கொழும்பில் கொண்டாடப்பட்டபோது தேசிய கீதம் தமிழிலும் பாடப்பட்டிருந்தது.

இச்செயற்பாடனது சிறிய விடயமாக இருந்தாலும் தமிழ் மக்களை பொறுத்தவரை ஒரு மகிழ்ச்சியான அவர்களுக்கு பிடித்தமான விடயமாகும். அத்துடன் அத்தகைய செயற்பாடு என்னையும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. என் மனதில் ஏற்ப்பட்ட மகிழ்ச்சியை எடுத்துகாட்டும் விதமாகவே நாகவிகாரைக்கு வந்து புத்தபெருமான் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தேன்.

நாகவிகாரைக்குச் சென்று புத்த பெருமானை வழிபட வேண்டும் என பலமுறை முயற்சித்திருந்த போதும் ஏதோவொரு காரணங்களால் அது நடைபெறாமலே தடைப்பட்டிருந்தது. எனினும் இன்று (நேற்று) ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்று இரத்து செய்யப்பட்டதால் எனக்கு வழிபட வாய்ப்புக் கிடைத்திருந்தது.

புத்த பெருமானுடைய அன்பும் கருணையும் இலங்கை மக்கள் அனைவர் மீதும் சென்றடைய வேண்டும். நாட்டில் புதியதொரு யுகம் பிறந்து சாந்தி சமாதானம் நிலவ வேண்டும் என நான் புத்தபெருமானிடம் வேண்டிக்கொண்டேன்.

மேலும் சுதந்திர தினத்தில் முன்மாதிரியாக முன்னெடுக்கப்பட்ட இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்களை சிங்கள மக்களுடன் சகோதரத்துவத்துடன் சரிக்கு சமமானவர்களாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறன என்ற செய்தியை வெளிப்படுத்தி நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

– See more at: http://athavansrilanka.com/?p=311561#sthash.1md3ATCf.dpuf

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply