யாழ்தேவி ரயில் சேவையை தாண்டிக்குளம் வரை நீடிக்க நடவடிக்கை

மதவாச்சிக்கும் கொழும்புக்கும் இடையே நடைபெற்று வரும் யாழ்தேவி ரயில் சேவையை, வவுனியாவுக்கு வடக்கே சுமார் 3 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள தாண்டிக்குளம் வரையில் நீடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம் வரையிலான ரயில் பாதையைச் சீர்செய்வதிலும், தாண்டிக்குளம் ரயில் நிலையத்தைப் புனர் நிர்மாணம் செய்வதிலும் ரயில்வே திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து வவனியா வரை நடைபெற்று வந்த யாழ்தேவி ரயில் சேவை, மார்ச் மாத முற்பகுதியில் இருந்து மதவாச்சியுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும், இந்த ரயில் சேவை எப்போது வவுனியா வரையில் மீண்டும் நடத்தப்படும் என்பது குறித்து எந்தவிதமான அறிவித்தல்களும் வெளியாகவில்லை.

இந்த நிலையிலேயே, யாழ்தேவி ரயில் சேவையை, தாண்டிக்குளம் வரையில் நீடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply