பாக். பயணத்தின்போது பிரதமர் மோடி, தாவூத் இப்ராகிமை சந்தித்தாரா? உத்தரபிரதேச மந்திரி குற்றச்சாட்டு

modiகடந்த டிசம்பர் மாதம் 25–ந்தேதி ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்த பிரதமர் மோடி, இந்தியா திரும்பும் வழியில் திடீரென பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு சென்று பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேசினார்.இந்த பயணத்தின்போது மோடி, பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ள மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமை, நவாஸ்ஷெரீப்பின் வீட்டில் சந்தித்ததாக சமாஜ்வாடிகட்சியின் மூத்த தலைவரும், உத்தரபிரதேச மந்திரியுமான அசம்கான் குற்றம் சாட்டி உள்ளார். அவர் கூறுகையில், ‘‘சர்வதேச சட்டவிதிகளை மீறி பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் சென்றார். அங்கு அவர் தாவூத் இப்ராகிமையும் சந்தித்தார். இதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது’’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசம்கானின் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்து உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, ‘‘இது முற்றிலும் தவறானது. அடிப்படை ஆதாரமற்றது’’ என்று குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply