பாண்துண்டு தொண்டையில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு .

paanபாண் துண்டொன்று தொண்டைக்குள் சிக்கியதால் பெண்ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.புத்தளம் முன்னே குளம் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான ஏ. தம்மிக்கா குலரத்ன என்ற (வயது41) வயதுடைய பெண்ணொருவரே சம்பவத்தில் உயிரிழந்தவராவார். அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலைப் பகுதிக்கு சுற்றுலா வந்த தாயொருவர் மிஹிந்தலை திருகோணமலை பிரதான வீதியின் மஹகனந்தராவ குளத்தினருகே இருந்த கடையொன்றில் காலை உணவாக பாணும் சம்பலும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பாண் துண்டொன்று தொண்டைக்குள் சிக்கியதால் அவதியுற்றுள்ளார்.

உடனே இவரது கணவர்  அவரை மிஹிந்தலை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்ற போதும் பாதிக்கப்பட்ட  தாயை பரிசோதித்த வைத்தியர்கள், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

உடற்கூற்றுப்  பரிசோதனைகளின் பின் மரணமடைந்த பெண்ணின் சடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மிஹிந்தலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : TELOnews, இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply