பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையில் விரிசல்?
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.வெளிவிவகார அமைச்சின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக விசேட குழுவொன்று நிறுவுதல் தொடர்பில் இந்த முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.முன்னாள் திறைசேரியின் ஆணையாளரும் தற்போதைய பிரதமரின் சிரேஸ்ட ஆலோகருமான சரிதா ரத்வத்தே தலைமயில் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் கொள்கை வகுப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் இந்தக் குழு தீர்மானிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.எனினும், பிரதமரின் இந்த தீர்மானம் குறித்து வெளிவிவகார அமைச்சர் அதிருப்தி வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறான ஓர் குழு நியமிக்கப்பட்டமை குறித்து தமக்கு எதுவும் தெரியாது எனவும், தமது அமைச்சின் விவகாரங்களில் தலையீடு செய்ய எவரையும் அனுமதிக்கப் போவதில்லை எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற அமைச்சர்கள் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சு எவ்வித செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை என பிரதமர் நேரடியாக குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சில வெளிநாட்டு விஜயங்களின் போது பிரதமர் வெளிவிவகார அமைச்சரை இணைத்துக்கொள்ளாத நிலைமை காணப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply