வவுனியா வான்பரப்பில் விடுதலைப் புலிகளின் விமானங்கள்
வவுனியா வான்பரப்பில் விடுதலைப் புலிகளின் விமானங்கள் பறப்பதாகக் கிடைத்த ரேடர் தகவலையடுத்து வவுனியாவின் வான் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
நேற்று புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் வவுனியாவிலிருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் இரணைமடுப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளின் விமானங்கள் பறப்பதாக ரேடர் காண்பித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மன்னார், அநுராதபுரம் மற்றும் மணலாறு இராணுவத் தலைமையகங்கள் உஷார் படுத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், வவுனியாவிலிருந்து 2 கிலோ மீற்றர் தூரம்வரை வந்த விமானங்கள் திடீரென ரேடார் கருவிகளிலிருந்து மறைந்ததாகத் தெரியவருகிறது. பாதுகாப்புத் தரப்பினர் எதிர் தாக்குதல்களை நடத்தத் தயாராக இருந்தபோதும் அதன் பின்னர் அந்த விமானம் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லையென கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்புத் தரப்பினரின் ரேடர் கருவிகளில் தென்பட்டதை அறிந்துகொண்ட விடுதலைப் புலிகளின் விமானங்கள் திரும்பிச் சென்றுவிட்டதாக பாதுகாப்புத் தரப்பில் நம்பப்படுகிறது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply