ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் படையை அனுப்பும் அமெரிக்கா

usaஆப்கானிஸ்தானில் பின்லேடனை வேட்டையாடுவதற்காக வந்த அமெரிக்க படைகள் அங்கிருந்த தலிபான் ஆட்சியை விரட்டியடித்து புதிய ஆட்சியை உருவாக்கியது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டன.தற்போது 9800 அமெரிக்க வீரர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளனர். அவர்கள் ஆப்கானிஸ்தான் படைக்கு உதவிகளை செய்வது தலிபான் தீவிரவாதிகள் மீது ஏவுகணை மற்றும் விமான தாக்குதல் நடத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆனால் சமீப காலமாக தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. பல இடங்கிளல் அவர்கள் கொடூர தாக்குதலை நடத்தி வருகிறார்கள். சில இடங்கள் அவர்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் கூடுதல் படையை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. தற்போது 200 வீரர்கள் ஆப்கானிஸ்தானுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

அவர்கள் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது தொழில்நுட்ப உதவிகளை செய்தல் போன்ற பணிகளை செய்வார்கள் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

2017–ம் ஆண்டுக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து படைகளும் வாபஸ் பெறப்படும் என்று ஏற்கனவே அதிபர் ஒபாமா அறிவித்து இருந்தார். ஆனால், தற்போது கூடுதல் படைகள் அனுப்பப்பட்டு வருவதால் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் இருப்பது மேலும் நீடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply