இயற்கை எரிவாயு ஏற்றுமதிக்கு கத்தார்-பாகிஸ்தான் 16 பில்லியன் டாலர் ஒப்பந்தம்

9f4f15ea-9f18-47e6-9a8b-eebe2d66b91d_S_secvpfகத்தார் நாடு, பாகிஸ்தானுக்கு இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்வதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 16 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 200 கோடி) மதிப்பிலானது. இந்த ஒப்பந்தப்படி, பாகிஸ்தானுக்கு ஆண்டுக்கு 37 லட்சத்து 50 ஆயிரம் டன் இயற்கை எரிவாயுவை கத்தார் நாடு ஏற்றுமதி செய்யும். இந்த தகவலை பாகிஸ்தான் பெட்ரோலிய மந்திரி ஷாகித் கக்கான் அப்பாசி வெளியிட்டார். இந்த தகவலை கத்தார் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. கத்தார், இயற்கை எரிவாயு ஏற்றுமதியை அடுத்த மாதம் தொடங்கி விடும்.

 

இந்த ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் பெட்ரோலிய மந்திரி ஷாகித் கக்கான் அப்பாசி, இஸ்லாமாபாத்தில் நிருபர்களிடம் பேசுகையில், “கத்தாருடனான ஒப்பந்தம் பாகிஸ்தானில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும். ஆண்டுக்கு 1 பில்லியன் டாலர் சேமிக்க வழி வகுக்கும்” என்றார்.

 

தற்போது பாகிஸ்தானில் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு கடுமையாக உள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply