கிறிஸ்தவர்கள் குறிவைக்கப்படுகின்றனர்: போப் பிரான்சிஸ் மற்றும் ரஷ்ய ஆர்த்தோடெக்ஸ் தலைவர் கூட்டறிக்கை

popமத்திய கிழக்கு நாடுகளில் வசித்து வரும் கிறிஸ்தவர்களை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினரின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க சர்வ்தேச் நாடுகள் முன்வர வேண்டும் என போப் பிரான்சிஸ் மற்றும் ரஷ்ய நாட்டின் பாதிரியார் கிரில் ஆகியோர் கேட்டு கொண்டுள்ளனர்.இது குறித்து அவர்கள் இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளில் குடும்பங்களாக, கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிக்கும் எங்களது கிறிஸ்தவ சகோதரர்கள் மற்றும் சகோதரிகளை முற்றிலும் அழிக்கும் செயல் நடைபெற்று வருகிறது.

அவர்களது சர்ச்சுகள் மீது காட்டுமிராண்டித்தன வகையில் தாக்குதல் நடத்தப்பட்டு கொள்ளையடிக்கப்படுகிறது. அவர்களது புனித பொருட்கள் களங்கப்படுத்தப்படுகின்றன. அவர்களது நினைவு சின்னங்கள் அழிக்கப்படுகின்றன என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply