மகிந்தவை மின்சாரக் கதிரையில் இருந்து காப்பாற்றி விட்டேன்! : என்கிறார் ஜனாதிபதி
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததனாலேயே முன்னர் ஆட்சியில் இருந்த அரசியல் தலைவர்கள் மின்சாரக் கதிரைக்கு கொண்டு செல்லப்படுவதில் இருந்து காப்பாற்றப்பட்டனர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.பொலன்னறுவை, வெலிகந்தை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தான் மின்சாரக் கதிரைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று அன்றிருந்த அரசியல் தலைவர்கள் குறிப்பிட்டிருந்த போதும் புதிய அரசாங்கம் வந்ததனாலேயே அவர்களை அதிலிருந்து காப்பாற்ற முடிந்தது. தற்போதை நிலையில் இலங்கையின் எதிர்கால பயணத்திற்கு அனைத்து நாடுகளினதும் ஒத்துழைப்பு மற்றும் ஆசீர்வாதம் இருப்பதுடன் இந்த நாட்டிற்கு எதிரிப் படை ஒன்றும் இல்லை. சர்வதேசத்தை வெற்றி பெற்று நாட்டை நாட்டை வெற்றியடையச் செய்யும் வேலைத் திட்டம் ஒன்றில் நுழைந்திருக்கிறோம். நாட்டினுள் சமநிலை அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் விஷேட வேலைத் திட்டங்களை செயற்படுத்த உள்ளதாக ஜனாதிபதி மேலும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply