இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி மஹிந்தவுடன் சந்தித்துப் பேச்சு விசா தவிர்ப்பு தொடர்பான ஒப்பந்தமும் கைச்சாத்து

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹசன் விராஜுடா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இச்சந்திப்பின் போது இருநாடுகளுக்குமிடையிலான விசா தவிர்ப்பு முக்கிய ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

நேற்றுக் காலை நடைபெற்ற மேற்படி சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன்னே மற்றும் இந்தோனேசியத் தூதுவர் டிஜார்ஹசன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மேற்படி ஒப்பந்தத்தில் இலங்கையின் சார்பில் வெளி விவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் இந் தோனேஷிய அரசின் சார்பில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹசன் விராஜுடாவும் கைச்சாத்தி ட்டுள்ளனர்.

முக்கியத்துவம் வாய்ந்த இவ் உத்தியோகபூர்வ சந்திப் பின் போது இருநாடுகளும் முகங்கொடுக்கும் பொது பிரச்சினைகள் பல கலந்துரையாடலுக்கு உட்படுத்தப் பட்டுள்ளது. அத்துடன் உலக பொருளாதார நெருக்கடி நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய நடவ டிக்கைகள் இலங்கையில் தற்போதைய அபிவிருத்திச் செயற்திட்டங்கள் பற்றியும் விரிவாகக் கலந்துரையாடப் பட்டுள்ளன.

இக்கலந்துரையாடலின் போது இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் விசேட வேலைத் திட்டங்கள் பற்றியும் இந்தோனேசிய அமைச்சருக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply