பிரதமர் மோடி தலைமையில் கர்நாடக மாநிலம் பெலகவியில் பிப். 27-ல் மாபெறும் விவசாயிகள் பேரணி

modiபிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக மாநிலம் பெலகவியில் வருகின்ற பிப்ரவரி 27-ம் தேதி மாபெரும் விவசாய பேரணி நடத்த உள்ளார். புதிய பயிர் காப்பீடு திட்டம் உள்ளிட்ட பா.ஜ.க., அரசின் விவசாய சார்பு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பெலகவி பகுதியில் இந்த மாநாடு நடைபெறுகிறது.  இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில பா.ஜ.க., தலைவரும் எம்.பி-யுமான பிரஹலாடா, பிரதமர் மோடி இந்த பேரணியில் பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனா திட்டம் குறித்து விவசாயிகளுக்கு தெளிவுபடுத்துவார் என்று கூறினார்.

 

மேலும், “கிஷான் சம்மேளன் திட்டத்தின் கீழ் நாடுமுழுவதும் 3 விவசாய மாநாடுகள் நடைபெறவுள்ளது. அதில் மூன்றாவது பெலகவியில் நடைபெறுகிறது. மற்ற இரண்டும் மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசாவில் நடைபெறும்” என்றும் அவர் தெரிவித்தார்.

 

புதிய பயிர் காப்பீடு திட்டத்தின் படி சுமார் 50 லட்சம் விவசாயிகள் முதற்கட்டமாக பயன் அடைவார்கள் என்று கூறிய பிரஹலாடா, காங்கிரஸ் தேசிய ஜனநாயக கூட்டணி மீது போலியான குற்றச்சாட்டுகளை முன் வைத்து விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறது என்றார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply