ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஜேர்மனி விஜயம்
ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயமாக இன்று திங்கட்கிழமை ஜெர்மனி செல்லவுள்ளார். இந்த மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜேர்மனிக்கும் ஸ்ரீலங்காவிற்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது. இன்று ஜேர்மனியை சென்றடையவுள்ள ஜனாதிபதிக்கு, அந்நாட்டு அதிபர் அஞ்சலா மேர்க்கல் தலைமையிலான குழுவினரால் நாளை மறுதினம் புதன்கிழமை விசேட வரவேற்பு வழங்கப்படவுள்ளதுடன் அந்நாட்டு அரசாங்கத்தின் விசேட அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்படவுள்ளது.
இதனையடுத்து ஜேர்மனி நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அங்கு அரச பிரதானிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
தொடர்ந்து ஜேர்மனி வௌிவிவகார அமைச்சர், பொருளாதார விவகார அமைச்சர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
ஜேர்மனிக்கான விஜயத்தைத் தொடர்ந்து எதிர்வரும் 19ஆம் திகதி ஜனாதிபதி ஒஸ்திரியாவுக்கும் செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply