பிராக்களுக்குள் மறைத்து கடத்த முயன்ற ரூ. ஐயாயிரம் கோடி போதைப்பொருள் ஆஸ்திரேலியாவில் பறிமுதல்

eisஆஸ்திரேலியா நாட்டின் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வரலாற்றில் முதன்முறையாக 100 கோடி ஆஸ்திரேலிய டாலர்கள் மதிப்பிலான ‘ஐஸ்’ எனப்படும் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டின் மந்திரி தெரிவித்துள்ளார்.பெண்களின் மேலழகை எடுப்பாகவும், கவர்ச்சியாகவும் வெளிப்படுத்த பல்வேறு வகையான உள்ளாடைகள் (பிரா) தற்போது விற்பனையாகி வருகிறது. அடர்த்தியான பஞ்சு (ஃபோம்) நிரப்பப்பட்ட பிராக்கள் எல்லாம் பழைய மாடலாகி, தற்போது வழவழப்பான அடர்ந்த திரவம் அடைக்கப்பட்ட கப்களை கொண்ட நவீனரக பிராக்கள் உலகம் முழுவதும் பரபரப்பாக விற்பனையாகி வருகிறது.

இவ்வகையிலான, பிராக்களின் கப்களுக்குள் சாதாரண திரவத்துக்கு பதிலாக ‘ஐஸ்’ எனப்படும் ‘மெத்தம்பெட்டமைன்’ போதைப் பொருளை அடைத்து சீனாவை சேர்ந்த சிலர் ஆஸ்திரேலியாவுக்குள் கடத்த முயல்வதாக ஆஸ்திரேலிய நாட்டு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஹாங்காங் நகரில் இருந்து சிட்னி நோக்கிவந்த சீனாவை சேர்ந்த ஒரு கப்பலை நடுக்கடலில் அதிகாரிகள் மடக்கி சோதனையிட்டனர், அப்போது, ஒரு கண்டெய்னரில் இருந்த பிராக்களை ஆய்வு செய்தபோது அவற்றின் கப்களில் 190 லிட்டர் அளவுக்கு மெத்தம்பெட்டமைன் எனப்படும் கொடிய போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இவற்றை கடத்திவந்த ஹாங்காங் நகரவாசிகள் நான்கு பேர் மற்றும் சீனாவை சேர்ந்த ஒருவரை ஆஸ்திரேலிய நாட்டின் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு அதிகாரிகள் கைதுசெய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது, சிட்னி நகர துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள கண்டெய்னர்களில் கலைப்பொருட்களுக்கு இடையில் மேலும் பல லிட்டர் ஐஸ் எனப்படும் மெத்தம்பெட்டமைன் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த கண்டெய்னர்களை சோதனையிட்டபோது, அங்கு மேலும் 530 லிட்டர் மெத்தம்பெட்டமைன் பிடிபட்டது. இரு இடங்களிலும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் உள்நாட்டு சந்தை மதிப்பு சுமார் 100 கோடி ஆஸ்திரேலிய டாலர்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 4878 கோடி ரூபாய்) என குறிப்பிட்டுள்ள அந்நாட்டு நீதித்துறை மந்திரி மைக்கேல் கீனான், ஆஸ்திரேலியா நாட்டின் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வரலாற்றில் இவ்வளவு பெரிய வேட்டை சிக்கியது இதுவே முதன்முறை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply