இஸ்ரேலில் பாலஸ்தீனர்கள் 5 பேர் சுட்டுக்கொலை
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே தொடர்ந்து பிரச்சினை வலுத்து வருகிறது. இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் பழைய நகர் மற்றும் மேற்குகரை பகுதியில் தினந்தோறும் இஸ்ரேலியர்களை, பாலஸ்தீனர்கள் கார்களை கொண்டு மோதியும், கத்தியால் வெட்டியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவ்வாறு தாக்குதல் நடத்துபவர்களை இஸ்ரேலிய போலீசார் அல்லது பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்று விடுகின்றனர்.
நேற்று ஜெருசலேம் பழைய நகர் பகுதியில் பாலஸ்தீனர்கள் 2 பேர் இஸ்ரேலிய போலீசாரை குறிவைத்து திடீரென துப்பாக்கிகளால் சுடத்தொடங்கினர். இதையடுத்து போலீசார் அந்த 2 பேரையும் சுட்டுக்கொன்றனர்.
முன்னதாக நேற்று முன்தினம் மாலையில், மேற்கு கரைபகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது பாலஸ்தீனர்கள் 2 பேர் கற்களை வீசி தாக்கினர். போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர்கள் 2 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அதே போல் மேற்குகரையில் உள்ள சோதனை சாவடி அருகே பாராளுமன்ற போலீஸ்காரரை தாக்க முயன்ற பாலஸ்தீனர் ஒருவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply